தமது விடுதலைக்காக அமையம் ஒன்றை உருவாக்கி, பெரும் கூட்டமாக போராடவும்! – அரசியல் கைதிகள் வலியுறுத்து!

332

 

தமது விடுதலைக்காக அமையம் ஒன்றை உருவாக்கி, பெரும் கூட்டமாக போராடவும்! – அரசியல் கைதிகள் வலியுறுத்து! 

1d0cd4a8-fbdb-4a2d-98e6-ce28c31e5180 5ab75e11-9d52-4492-bede-46e0c187047d 147b2aae-e9fa-41b8-a0ab-f5effabf975c 0961c92e-9b8d-400e-b48b-4b67b9a5e04e 5936ca2b-38d9-4eb3-83a7-91901351bfb6

தமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.

நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாட்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து,

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று (17.11.2015) காலை சென்று அரசியல் கைதிகளுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன், ஈ.சரவணபவன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நீராகாரம் வழங்கினர்.

இதன்போதே அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

SHARE