அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விசேட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அநுராதபுரம் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடாத்தி 10 விமானங்களை முழுமையாக சேதப்படுத்தியமை,
மேலும் 6 விமானங்கள் பகுதியளவில் சேதப்படுத்தியமை மற்றும் 14 பாதுகாப்பு படை உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட குற்றங்கள் இந்த சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
எனினும், இந்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.