நாடாளுமன்ற செயற்குழுக்களின் தலைமைப் பதவி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றில் புதிதாக நிறுவப்பட உள்ள செயற்குழுக்களின் தலைமைப் பதவி வெற்றிடங்கள் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
சில அமைச்சுக்களை ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த செயற்குழுவின் தலைவருக்கு அமைச்சர் ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் மாதங்களில் இந்த புதிய செயற்குழுக்கள் நிறுவப்பட உள்ளன.
நாடாளுமன்ற நிலையான செயற்குழுக்களின் பணிகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றிற்கு அருகாமையில் இயங்கி வந்த விவசாய அமைச்சின் கட்டிடமொன்று பயன்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றின் செயற்பாடுகளை வலுவானதாக்கும் நோக்கில் இவ்வாறு செயற்குழுக்கள் நிறுவப்பட உள்ளன.
பிரதமரின் எண்ணக்கருவின் அடிப்படையில் இவ்வாறு நாடாளுமன்ற செயற்குழுக்கள் நிறுவப்பட உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.