அலரிமாளிகைக்கு தனிவாகனத்தில் வரவேண்டாம்! அரச அதிகாரிகளுக்கு பிரதமர் கண்டிப்பான உத்தரவு

318

அலரி மாளிகை வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தந்த அரச அதிகாரிகள் 15 பேர் 16 வாகனங்களைப் பயன்படுத்தியிருந்தனர்.

அவர்களில் ஒரு அதிகாரி வரும்போது வந்த வாகனம் சற்று நேரம் கழித்து அவரது மனைவியின் தேவைக்காக புறப்பட்டுச் சென்றுவிட, அவர் மீண்டும் வேறொரு வாகனத்தை வரவழைத்து கலந்துரையாடலின் முடிவில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இது குறித்து அலரிமாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து இனிவரும் காலங்களில் அலரிமாளிகைக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக் கூடாது என்றும், ஒரு வாகனத்தில் குறைந்தது நான்கு அரச அதிகாரிகளாவது சேர்ந்து வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் அரச நிறுவனங்களின் வீண்செலவுகளைத் தவிர்ப்பதுடன், எரிபொருள் சிக்கனத்தையும் கடைப்பிடிக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE