கோடரி ஒன்று தவறுதலாக தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

336

 

மஹியங்கன – தியகோமல பிரதேசத்தில் கோடரி ஒன்று தவறுதலாக தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றபோது, குழந்தையின் தலையை கோடரி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குழந்தை பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தவல்கள் குறிப்பிடுகின்றன.

SHARE