மன்னார் யாழ்ப்பாணம் ஏ 32 பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்…
நாட்டின் பல பாகங்களிலும் ஏற்ப்பட்ட சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தால் மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி (ஏ32) வாகனங்கள் போக்குவரத்துக்கு தடையாக உள்ளநிலையில், பாலியாறு மற்றும் மண்டக்கல்லாறு ஆகிய இரு பிரதான ஆறுகள் வீதியைக் கடக்கும் இடங்களில் இந்த வெள்ளநீர் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த இடத்துக்கு 18-11-2015 புதன் மதியம் நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் அங்கு மக்களுக்கு படகு போக்குவரத்து சேவைகளை இலவசமாக வழங்கிக்கொண்டிருந்த கடற்ப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, அவர்களது சேவைக்கு தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அத்தோடு அவர் மேலும் அங்கு தனது கருத்தை தெரிவிக்கையில் சென்ற ஆண்டும் இதேபோல வெள்ளம் காரணமாக வீதியின் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மேற்குறித்த இந்த பிரதான வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகவும் இருப்பதனால் விரைவாக செயற்ப்பட்டு இவ்விரு பகுதிகளுக்குமான புதிய பாலங்களை அமைத்து மக்களது போக்குவரத்துக்கு ஓர் சுமூகமான நிலைமையை எதிர்வரும் ஆண்டுகளில் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.