வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சநத்திர இன்று முதல் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன
வவுனியாவில் சுமார் 4 வருடங்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சந்திர வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகைள கருத்தில் கொள்வதில்லை என வட மாகாணசபையில் அவரை இடமாற்றம் செய்யவேண்டும் என கோரி பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது.
இந் நிலையில் அவர் காலி மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிலையில் தனது இடமாற்றம் தானாக விரும்பி பெற்றதே தவிர அரசியல் காரணங்களுக்கு உட்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.