மீண்டும் வீதியில் இறங்கிய ராவணா பலய.

327

தமிழ் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா பலய அமைப்பு இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தந்த ராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளித்தனர்.

தமிழ் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதன் ஊடாக நாட்டை மீண்டும் அழிவுக்குள் கொண்டுசெல்ல அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ராவணா பலய அமைப்பு தெரிவித்தது.

 

SHARE