ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுடன் புகைப்படங்களிலும், அவரது நூறு நாள் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற கானமல் போன் எனது மகளை மீட்டுத்தாருங்கள் என
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தாய் ஒருவர் அமைச்சர் மணோகணேசனிடம் கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பெரியமடு பிரதேசத்தை சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயலவதனி எனும் தாயே ஜனாதிபதியுடன் காணப்படுகிறன்ற தனது மகளை மீட்டுத்தாருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமி கடந்த 2009-03-04 ஆம் திகதி இறுதி யுத்தம் இடம்பெற்ற இரட்டைவாய்க்கால் பகுதியில் வைத்து இரானுவத்தின் சுற்றி வளைப்புக்குள் உட்பட்டு பிடிப்பட்டதாகவும் பின்னர் இது வரைக்கும் எவ்வித தகவலும் இன்றி இருந்தாகவும் ஆனால் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் தேர்தல் பிரச்சார நூறுநாள் துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற புகைப்படம் ஒன்றில் தனது மகள் ஜனாதிபதியுடன் காணப்படுவதாகவும் இதேவேளை இவ்வருடம் ஒன்பதாம் மாதம் மூன்றாம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாளின் போது நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சி ஒன்றிலும் தனது மகள் ஜெரோமி காணப்பட்டதாகவும் எனவே தனது மகள் உயிருடன்தான் இருக்கின்றார் எனவும் அவரை மீட்டுத்தாரும் தாய் கண்ணீருடன் கோரியுள்ளார்.
அத்தோடு தான் பல தடவைகள் சம்மந்தன் ஜயா உள்ளிட்ட பல அமைச்சர்கள் ஆகியோருடன் குறித்த ஆதாரங்களை காட்டி கதைத்ததாகவும் ஆனால் இதுவரைக்கும் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்.