கொழும்பு புறநகர்ப் பகுதி ஹோட்டலில் அதிர்ச்சிகர விடயமொன்று.

304

குற்றச்செயல்களை வெளிச்சமிட்டுக்காட்டும் செய்தித் தொகுப்பு இம்முறையும் அதிர்ச்சிகர விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளது.

ஆம் , தம்பதியினர் மற்றும் காதலர்கள் வந்து செல்லும் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசிய கமெரா மூலம் அங்கு அறைகளில் நடப்பவை பதிவுசெய்யப்பட்டு வந்த சம்பவமே அது.

குளியாபிட்டியவில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலில் உள்ள அறைகளில் , ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு. அங்கு நடப்பவை மிகவும் சூட்சுமமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வெறொரு அறையில் அக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டும் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹிரு வின் சி.ஐ.ஏ. வும் இத்தகைய நடவடிக்கை தொடர்பில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இத்தகைய இடங்களுக்கு செல்லும் ஜோடிகள் தமது எதிர்காலம் தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்கும் பொருட்டு இச் செய்தி வெளியிடப்படுகின்றது.

SHARE