சூர்யா நடிப்பில் தற்போது பசங்க-2, 24 ஆகிய இரண்டு படங்களும் ரெடி. இதன் பின் சிங்கம்-3ல் நடிக்கவிருக்கின்றார். இப்படத்திற்காக ஹரி திரைக்கதை அமைக்கும் பணியில் மிக தீவிரமாக உள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் இசைய்மைப்பாளராக அனிருத்தை கமிட் செய்து பின் செண்டிமெண்ட் காரணமாக தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளே வந்தார். பின் தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை மீண்டும் அனிருத்தே கமிட் ஆகியுள்ளார்.
மேலும் இரண்டு பாகங்களிலும் சூர்யா முறுக்கு மீசையுடன் வலம் வருவார். இந்த படத்தில் கொஞ்சம் கெட்டப் மாற்றலாம் என கூறினர். ஆனால், சூர்யா ஹிட் செண்டிமெண்ட் காரணமாக பழைய முறுக்கு மீசையுடன் தான் சிங்கம்-3யிலும் வருவாராம்.