ஹிந்தியில் ரீமேக்காகும் மற்றொரு விஜய் படம்!

280

முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் ‘கத்தி’. இந்த படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகலாம் என கூறப்பட்ட நிலையில், இப்போது ஹிந்தி ரீமேக் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.

அக்ஷய் குமார் விஜய் வேடத்தில் நடிக்க, புதுமுக இயக்குனர் ஜகன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இதற்கு முன் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ரீமேக்கிலும் அக்ஷய் குமார் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகதாஸ் மற்றும் லைகா இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.

SHARE