கடத்திச் செல்லப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்! நிர்ப்பந்தப்படுத்தி இராஜினாமா கடிதம்

389

வடக்கு மாகாண சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினர் அகிலதாஸ் தான் கடத்தப்பட்டு, இராஜினாமா கடிதமொன்றில் நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

download

இது குறித்து அவர் மாகாண சபையில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும்  இணையச் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாண சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினர் அகிலதாஸ் கடந்த 16ம் திகதி இரவு அவரது வீட்டிலிருந்து மர்ம நபர்களால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அவரைக் கடத்திச் சென்றவர்கள் ராஜினாமாக் கடிதமொன்றில் அவரை நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்திட வைத்துள்ளார்கள். அதன் பின்னர் வேறு தரப்பின் ஊடாக இராஜினாமாக் கடிதம் மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து மரியதாஸ் மாகாண சபையில் விசேட உரையொன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி- வடமாகாண சபை உறுப்பினர் அகிலதாஸின் பதவி விலகல் கடிதத்தில் சந்தேகம் உள்ளது: சீ.வி.கே.

 

SHARE