கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக விஜய்யோடு ஜோடி சேரும் சமந்தா, விஜய்59 படத்தில் இதுவரை செய்யாத விஷயத்தை செய்துள்ளாராம். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் என்பதுவே அது.
நடிகை மீனாவின் மகள்தான், படத்தில் ‘விஜய்-சமந்தா’வின் மகளாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் போலீசாக நடிப்பதால் படத்திற்கு ‘காக்கி’ அல்லது ‘தாறு மாறு’என பெயரிட்டிருப்பதாக கோலிவுட் வட்டாராத்தில் கிசுகிசுக்கபட்டுவருகிறது.
இருந்தாலும், படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாவதால், படத்தின் டைட்டில் பற்றிய ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.