![]() இந்திய அணி பந்துவீச்சாளர்களின் சுழலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது தென் ஆப்பிரிக்கா அணி. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து, 215 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஜடேஜா, அஷ்வினின் சுழலில் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து திணறி வருகிறது. முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 75 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. |