இன்றைய தினம் காலை 9மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கமே இப்போதாவது வெளியிடு என்ற கருப்பொருளில் கோசங்களும், பதாகைளும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர்.
இதன்போது காணாமல்போன தங்கள் உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். என கண்ணீர்மல்க கதறியழுது உறவுகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
சுமார் 1 மணிநேரம் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த நிலையில், தென்னிலங்கையிலிருந்தும் சிங்கள உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், பௌத்த மத துறவிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.