சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் ரஜினி முருகன் படம் பிரமாண்டமாக திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து மனம் திறந்த சிவகார்த்திகேயன் ’நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல்கள் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வருவதற்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது’ என கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி தன் கடந்த கால நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். இதில் ’நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவர்களுடன் ஒருமுறை பேட்டி எடுக்கும் போது அவர் கூறினார் ஒருநாள் நீ கதாநாயகனாக வருவாய், அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன் என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விக்ரம் சாரை பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன்’ என தெரிவித்துள்ளார்.