வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை!– மாவை

589

 

வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
SAM_0483

இந்த வரவு செலவுத்திட்டத்திலும் வடக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கமும் வடக்கு அபிவிருத்தி தொடர்பிலான பணிகளை வேறும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு செய்யும் வழிமுறைகளை பின்பற்றி வருகின்றது.

ஏன் எமது உறுப்பினர்களிடம் கருத்து கோரப்படுவதில்லை.

ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வடக்கு மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அந்த மக்களுக்காக விசேட சலுகைகளை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்களில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE