யாழ், கிளிநொச்சி அபிவிருத்தி குழுவின் தலைவராக அமைச்சர் விஜயகலா

347

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்துக்கான கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இவரது தலைமையிலேயே இடம்பெறவுள்ளது.

கடந்த வாரம் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த இரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரச பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை இருந்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.Vijayakala

SHARE