இலங்கையில் தீராத ஆபத்து, வளிமண்டலவியல் திணைக்களம் திடீர் எச்சரிக்கை.

302

 

rainவளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பகல் 12 மணியளவில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஒருசில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தந்த பகுதிகளில் தற்காலிகமாக கடும் காற்று வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்படும் மின்னல் தாக்கங்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுமாரும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE