அவைத்தலைவர் சி .வி. கே. சிவஞானத்தின் அழைப்பை புறக்கணித்த வடமாகாணசபையின் முதலமைச்சரும் அமைச்சர்கள் உற்பட 23 உறுப்பினர்களும்

394

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. எனினும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் உட்பட 23 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

787878dkudws

கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பெய்த கடும் மழையால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சென்னையில் மாத்திரம் சுமார் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தன.

200 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்வாறு பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபை அவசர கலந்துரையாடல் ஒன்றை இன்று காலை 10 மணிக்கு நடத்தியது. இந்தக் கலந்துரையாடலில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்த, சொத்து அழிவுகளை சந்தித்த தமிழக மக்களுக்கு வடக்கு மாகாண மக்கள், சபையின் சார்பில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதியம் ஒன்றை உருவாக்கி இதற்கான உதவிகளை மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் வங்கித் துறையினர், வர்த்தக துறையினர், தனியார் துறையினர், கூட்டுறவு துறையினர் என பல்வேறு துறை சார்ந்தவர்களின் பங்களிப்புடன் எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கையளிப்பது என முடிவு எட்டப்பட்டது.

இந்த நிதியத்துக்கான வங்கிக் கணக்கு நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் இந்தக் கணக்கு இலக்கத்திற்கு நேரடியாகவோ பேரவை ஊடாகவோ விரும்பியவர்கள் பங்களிப்பினை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வழங்கலாம்.

இதேசமயம் இந்தக் கணக்கு இலக்கத்துக்கு புலம் பெயர் உறவுகளும் தங்களாலான உதவிகளை செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் 38 மாகாண சபை உறுப்பினர்களில் 15 பேரே கலந்து கொண்டனர்;

அத்துடன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலந்துரையாடலுக்கு சமுகம் தந்தவர்கள் சீ.வீ.கே.சிவஞானம் பா.கஜதீபன் விந்தன் கனகரத்தினம் கே.சயந்தன் எஸ்.தவராசா சி.அகிலதாஸ் பி.அரியரட்ணம் வை.தவநாதன் எஸ்.பசுபதிபிள்ளை க.சிவநேசன் து.ரவிகரன் எம்.தியாகராசா ஆர்.இந்திரராஜா பி.நடராஜ் அ.பரஞ்சோதி கலந்துரையாடலுக்கு சமுகம் தராதவர்கள் யாழ்ப்பாணம் சி.வி.விக்னேஸ்வரன் பொ.ஐங்கரநேசன் எம்.கே.சிவாஜிலிங்கம் அனந்தி சசிதரன் இமானுவேல் ஆர்னல்ட் க.தர்மலிங்கம் க.சர்வேஸ்வரன் வே.சிவயோகன் ச.சுகிர்தன் வவுனியா அன்ரனி ஜெகநாதன் ஜாஸ்தீன் ஜவாகர் வ.கமலேஸ்வரன் கிளிநொச்சி த.குருகுலராஜா வவுனியா பா.சத்தியலிங்கம் த.லிங்கநாதன் அ.ஜெயதிலக்க தர்மபால செனவிரத்ன மன்னார் பா.டெனிஸ்வரன் எஸ்.குணசீலன் அயூப் அஸ்மின் எஸ்.சிராய்வா எம்.ரஜீஸ் அ.ரிப்கான் –

SHARE