பண வவுச்சர்கள் வழங்குவதில் தாமதம் ஏன்? பின்னணியில் சூழ்த்தித் திட்டம் இருக்கிறதா?

304
பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்குப் பதிலாக பண வவுச்சர்களை வழங்கும் நடவடிக்கையை கடந்த 4ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டுவருமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அந்நடவடிக்கை நிறைவுபெறவில்லை. சில பாடசாலைகளில் மாணவர்களுக்கான பணவவுச்சர்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மாணவரும் பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட திகதிக்குள் மாணவர்களுக்கு ஏன் பணவவுச்சர் வழங்கப்படவில்லை என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சு சி.ஐ.டியின் உதவியை நாடியுள்ளது என அறியமுடிகின்றது.

“பாடசாலை மாணவர்களுக்கு பணவவுச்சர்கள் வழங்கும் திட்டத்தை குழப்பியடிப்பதற்குச் சிலர் முயற்சிக்கின்றனர். எனவே, தாமதத்துக்கும் இந்த சூழ்ச்சித் திட்டத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது. 4 ஆம் திகதிக்குள் செய்து முடிக்கவேண்டிய திட்டத்தை சில அதிபர்கள், வகுப்பு ஆசிரியர்கள் ஏன் தாமதப்படுத்தினார்கள்? இதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்கின்றதா? எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணை நடவடிக்கையை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE