மழையால் பாதிக்கப்பட்ட திரையரங்கு வசூல்கள்

275

சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை, தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸையே துடைத்துப்போட்டுவிட்டது. மழை அவ்வளவாகப் பெய்யாத பகுதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தீபாவளிக்கு வெளியான வேதாளம், தூங்கா வனம், இரு வாரங்களுக்கு முன் வெளியான உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள் மழையால் கடுமையான பாதிப்புக்குள்ளாகின.

சென்னையில் பல திரையரங்குகள் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன கடந்த வாரம் முழுவதும். குறிப்பாக காசி, உதயம், கமலா போன்ற அரங்குகளை வெள்ளம் சூழ்ந்து நின்றது. காசி தியேட்டருக்குள் வெள்ளம் புகுந்து நான்கைந்து தினங்கள் காட்சிகளே நடக்காத நிலையில் உள்ளது.

புறநகர்ப் பகுதிகள் மற்றும் வெளியூர்களில் மின்சாரமில்லாததால் பல அரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

SHARE