வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வருட இறுதி திட்ட மீளாய்வு ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது…

355

 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வருட இறுதி திட்ட மீளாய்வு ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது…
8e539418-1d0b-46d8-b120-a9c60bec01cc 09f9d641-fed5-44eb-a7d2-da00e121eda9 83a38fe4-8e52-447a-9909-bd3444fbfecb
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் தலைமையில், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான திட்ட மீளாய்வு ஒன்றுகூடல் 07-12-2015 திங்கள் மாலை 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகர் கடற்க்கரை வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் அலுவலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த விசேட ஒன்றுகூடலில் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,  மற்றும் ஐந்து மாவட்டங்களினதும் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE