சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை – சென்னை விமானப் போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் UL-127 எனும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் சென்னை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த கடும் மழையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தேங்கிய வெள்ளம் காரணமாக அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது வெள்ளநீர் வடிய ஆரம்பித்திருக்கும் நிலையில் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.