வணிக நகரமான கொழும்பில் அமைந்துள்ள அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை என்பவற்றை ஸ்ரீஜயவர்த்தனபுரவில் உள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்றாகும். இதற்கமைய இன்று நடைபெறும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மாநகர அபிவிருத்தி தொடர்பாக மக்களின் கருத்துக் கணிப்பு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடத்தப்படவிருப்பதாக அமைச்சர் ரணவக்க சபையில் இன்று கூறினார்.
இதேவேளை கடந்த 1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சியின்போது ஸ்ரீஜயவர்த்தனபுர நகரம் ஸ்ரீலங்காவின் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.