ஆட்டநாயகன் விருதை சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ரஹானே

334
இந்திய துடுப்பாட்ட வீரர் ரஹானே தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

இந்தியா– தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா அணி 337 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய ரஹானே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இதன் பிறகு பேசிய ரஹானே, “நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய திறமையை வளர்த்துக்கொள்கிறேன். நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முடிவுடன்தான் களமிறங்கினேன். என்னை தயார்படுத்திக் கொள்வதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். இதனை பின்பற்றும் போது தான் அதற்கான பலன்கள் நம்மை பின் தொடரும். மேலும், இந்த விருதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கும்
ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
SHARE