விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தடைப்பட்டியல் நீக்கம் நியாயமானது! அரசாங்கம்

389

 

முன்னர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற அடிப்படையில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நியாயப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தன இந்த விடயத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

முழுமையாக உயர்மட்டக்குழு ஒன்றினால் ஆராயப்பட்ட பின்னரே இந்த தடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த மூன்று வருடங்களாக பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடாதவர்களும் அமைப்புக்களுமே தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

SHARE