மாற்றாந்தாய் பிள்ளைகளாக கவனிக்கப்படுகின்றோம்: சிவசக்தி ஆனந்தன்

327

 

செல்வந்தர்களை செல்வந்தர்களாகவும், வறியவர்களை வறியவர்களாகவும் மாற்றும் வகையிலேயே இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகளை போலவே கவனிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, மேல் மாகாணத்திற்கு 52 மில்லியன் ரூபாவும், தென் மாகாணத்திற்கு 33 மில்லியன் ரூபாவும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வட மாகாணத்திற்கு 29 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று கிழக்கு மாகாணத்திற்கு 26.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, தமிழ் மக்கள் மாற்றாந்தாய் பிள்ளைகளை போன்றே கவனிக்கப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE