தென் மாகாணத்தில் தமிழ் மொழியை மறந்து வருகின்றனர்: வே.இராதாகிருஸ்ணன்

315

அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைக்கு அமைய நாட்டில் காணப்படும் அனைத்து பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

பின்தள்ளப்பட்ட ஆளணி மற்றும் உட்கட்டமைப்புக்கள் குறைவாக உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கபட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கபடும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

காலி மல்ஹருஸ்சுலியா முஸ்லிம் தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

தென்மாகாணத்தில் காணப்படும் 35 முஸ்லிம் பாடசாலைகளும் பெரும் தோட்டங்களில் காணப்படும் 10 தோட்ட பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யபடவுள்ளன.

தென் மாகாணத்தில் வசித்து வரும் தமிழ்மொழி பேசுவோர் தமிழ் மொழியை மறந்து வருகின்றனர்.

இந்ந பாடசாலையிலும் சிங்களம், தமிழ் போன்ற இரு மொழிகளிலும் மாணவர்கள் கல்வி பயின்று வருவதை நான் மிகவும் வரவேற்கின்றேன்.

இது இந்ந நாட்டின் இன ஒற்றுமையை காட்டுகின்றது. இருந்தும் நாம் பேசும் மொழியை வளர்க்க வேண்டும்.

2016 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் கல்விக்கு அதிகளவு நிதி ஒதுக்கபட்டுள்ளது. அதன் மூலம் பாடசாலைளின் உட்டகட்மைப்பு அபிவிருத்திகள் மாத்திரம் அல்லாது. ஆசிரியர்களுக்கும் முழு நேர பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதன் மூலம் தொடர்ந்து வரும் 05 ஆண்டுகால பகுதியில் கல்வியில் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று கூறினார்.

SHARE