இந்திய றோலர்களை இடை நிறுத்து தவறினால் முல்லை மன்னார் தீவில் போராட்டங்கள் ஆக்கிரமிக்கும். பாராளுமன்றத்தில் வைத்திய காலாநிதி சி.சிவமோகன் எச்சரிக்கை.

424

 

09.12.2015 இன்று நடைபெற்ற கடத்தொழில் நீரிகவள மூல அபிவிருத்தி அமைச்சின் வரவு  செலவுத்திட்ட விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் வைத்திய காலாநிதி சி.சிவமோகன் ஆற்றிய உரை.
40b4a942-89ee-4d62-be1e-1b4c445c48cf 49bc3047-3227-4042-bf2f-516bcc86afa2 240e24cd-85f6-4545-a483-0d7a1c03d856 c89ca968-b196-4ece-b9f1-7b5ea0ff47c0
அன்று முத்து குளிக்கும் பூமி என்றும் இரத்தினக்கல் உதிர்க்கும் பூமி என்றும் அமைதி பூங்கா என்றும் ஒட்டு மொத்தத்தில் அழகிய தீவு என்றும் இலங்கை தீவு அழைக்கப்பட்டது இன்று அனைத்தும் அழிக்கப்பட்டு அபாய பூமி ஆகிக்கொண்டிருக்கிறது அட்டை பிடிக்கும் தொழில் சட்ட விரோதமாக எமது கடலில் அரங்கேறி கொண்டிருக்கிறது. கடந்த கால இரத்த வரலாற்று அரசு செய்ததைத்தான் இன்று நல்லாட்சி  எனும் பெயரில் மைத்திரி அரசு அமைதியாக செய்து கொண்டிருக்கிறது.
வடக்கில் சாலை கடற்கரையில் ஆயிரக்கணக்கான வள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான வேற்று மாவட்டத்தவர்கள் அமைச்சர்களின் ஆதரவுடன் சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அட்டைபிடிக்கும் தொழில் பகலில் செய்யப்பட வேண்டும்? குறிப்பிட்ட அளவு அட்டைகள் மட்டும் பிடிக்கப்பட வேண்டும்? ஒளியூட்டிப்பிடிக்கப்பட கூடாது?
சங்குகள் அடிமட்டத்தில் இருந்து அள்ளப்பட கூடாது? அனைத்தையும் சட்டவிரோதமாக செயல்படுத்துபவர்களால் சாலைஇ மாத்தளன் இ பொக்கனைஇ வலைஞர்மடம் இ  மக்களின் மீன் வளங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வறுமையை தொட்டு கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் நடந்தது  நடப்பாண்டிலேயே.
எமது நல்லாட்சி அரசின் காலத்திலேயே இந்த சட்ட விரோத தொழில் செய்பவர்கள் அமைச்சர்களின்  அடிவருடிகளே: அவர்களுக்கு காவலாக அரச இராணுவம் செயல்படுகிறது. சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு  அரச இராணுவம் காவல் காப்பதா?
எனவே 2016 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத அட்டை பிடிக்கும் தொழில் நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் தெரிவிக்கையில் அள்ளுவலைகளை பயன்படுத்தும் இந்திய றோலர்கள்.
இன்று இந்திய றோலர்கள் முல்லைத்தீவு கடலில் மீண்டும்  ஊடுருவத் தொடங்கிவிட்டார்கள் மக்கள் பருதவித்துப்போய் இருக்கிறார்கள் பல தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. பலனூறு இந்திய றோலர்கள் முல்லை கடலை அதன் வளத்தை அலங்கோலப்படுத்த தொடங்கிவிட்டார்கள். அள்ளு வலைகளை பாவித்து இறால்களை அள்ள தொடங்கி விட்டார்கள். சாதாரண வள்ளங்களை பாவித்து தமது வாழ்வாதாரங்களை நிவர்தி செய்யும் வளைஞர்மடம் செல்வபுரம் முல்லைத்தீவு அளம்பில் கொக்கிளாய் மீனவர்கள் பாதிப்படைந்து போய் இருக்கிறார்கள். பரந்த கடலில் அனைத்தையும்  அழித்து முடித்த ஊடுருவல்காரர்கள் இன்று எமது குட்டி தீவின் வளத்தை சூறையாடிவருகின்றார்கள் விடுதலைப்புலிகள் இருந்த காலம் வரை பாதுகாக்கப்பட்ட எமது கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரச படைகளின் கண்முன்னால் அழிக்கப்படுகின்றது உடன் நிறுத்தப்படவேண்டும். கடந்த ஜந்து மாத காலங்களில் 17 ஆயிரம் சட்ட விரோத மீன்பிடி வள்ளங்கள் எமது இலங்கைத்தீவின் கடல்வளத்தை ஊடுருவி உள்ளன என்றால் எண்ணிப்பாருங்கள் எவ்வளவு மீன்களை அள்ளிச்சென்று இருப்பார்கள் என்று?.
இலங்கைத்தீவின் மொத்த கடல்வளம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 619 சதுரமுஆ ஆகும் இது மலேசியாவை விட தாய்லாந்தைவிட ஏன் வியட்னாமை விட பெரிய பிரதேசமாகும்.
எனவே எமது கடல்வளம் சட்டவிரோத பாதுகாபப்பற்ற  ஒழுங்கு முறைகளற்ற மீன்பிடிக்கும் முறைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும் எமது வடபகுதி கடலில் சட்ட விரோத றோலர்காரர்கள் ஊடுருவுவோர்களால் முல்லை மண்ணை  மன்னார் தீவை  அகிம்சை போராட்டங்கள் ஆக்கிரமிக்கும். உண்ணாவிரதங்கள் தானாக உதிக்கும். உயிர்பலிகள் மீண்டும் இந்த நல்லாட்சி  அரசுக்கு சமர்பணம் செய்யப்படும் நல்லாட்சி என்ற  உங்கள் அரசின் பெயர் ஏமாற்று அரசாக  எமது மக்கள் வரலாற்றில் வரைவார்கள்.
எனவே உடன் இந்திய றோலர்களை நிறுத்துங்;கள் கடல் தொழில் அமைச்சரே? இது உங்களுக்கு சமர்ப்பணம்.
வெளிமாவட்ட மீனவர்கள் முல்லை மண்ணில் ஊடுருவல்
நாயாறு கொக்கிளாய் பிரதேசத்தில் எமது மக்கள் பரம்பரை பரம்பரையாக தொழில் செய்து வந்தார்கள் அங்கு சிலபத்து சிங்கள மீனவர்களும் தொழில் செய்து வந்தார்கள். இன்று அது சட்ட விரோதமாக 500 பேருக்கு மேல் 500 வள்ளங்களுக்கு மேல் அடாவடித் தனமாக மீன்பிடிக்கும் இடமாக மாறியுள்ளது. எமது மீனவர்கள் நாயாறு  கொக்கிளாய் பிரதேச  அரச இராணுவத்தால் தொழில் செய்ய தடை செய்யப்படுகிறார்கள் அதற்கு காவலாக அரசபடை இராணுவம் தடைமுகாம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
எனவே கடல்தொழில் வள திணைக்களம் முல்லைத்தீவு கடலில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் நீதியாக செயல்பட வேண்டும் சட்டவிரோத  நடைமுறைக்கு துணை போகக் கூடாது இராணுவத்தின் ஆதரவுடன் எமது மக்களை அடக்கி ஒடுக்க கூடாது.
நாயாற்றில் அமைந்துள்ள இராணுவ முகாம் முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்கு பதிலாக காவல்துறை பிரிவினர் போடப்பட்டு சட்டப்படி செயல்பட உத்தரவு இட வேண்டும்.
இராணுவம் என்றும் தேசிய பாதுகாப்புக்கு உரியவர்கள் அல்ல சட்டவிரோத சாராய வியாபாரிகளாக செயல்படுகிறார்கள் இன்னும் செயல்படுகிறார்கள் சிங்கள மீனவர்களிடமே மீன்களை லஞ்சமாக பெறுகிறார்கள் இன நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்கிறாhகள்.
வட்டுவாகல் களப்பின் இருபக்கமும் இராணுவமுகாம் அமைத்து எமது  மக்களை மீன்பிடிக்க செல்லவிடாது தடுத்துவருகிறார்கள்.
எனவே வட்டுவாகல் களப்பின் இராணுவமுகாம் அகற்றப்பட வேண்டும். நாயாறு கடலில் சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் சட்டவிரோத மீன்பிடிகாரர்கள் வெடி வைத்து மீன்பிடிக்கிறார்கள் இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.
கொக்கிளாய் பிரதேசத்தில் எமது பூர்வீகதமிழ் குடிகளின் பாடுகள் திரும்பவும் வழங்கப்பட வேண்டும்.
எனவே நல்லாட்சி அரசு முதலில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் முன்னைய அரசின் நடைமுறைகளில்  இருந்து மாறிக் கொள்ள வேண்டும் பழைய அதிகாரிகளின் பழக்க வழக்கங்களை மாற்ற முயற்சிக்க வேண்டும் ஒட்டுமொத்தத்தில் முல்லை மன்னார் வடபகுதி மீனவர்களின் கோரிக்கை உடன் நிறைவேற்றுப்பட வேண்டும். தவறினால் முல்லை மண்ணில் மன்னார் தீவில் போராட்டங்கள் ஆக்கிரமிக்கும் என்றார்
SHARE