யாழ்.பரமேஷ்வரா சந்தியில் தனியார் பேருந்து சாரதி, நடத்துனரும், இ.போ.ச பேருந்து சாரதி, நடத்துனரும் நடுவீதியின் நின்று சண்டையிட்ட நிலையில், ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை விட்டி இறங்கி வேறு பேருந்துகளில் சென்றுள்ளனர்.
இன்றைய தினம் காலை 11.30 மணியளவில் மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த இரு பேருந்துகளும் பலாலி வீதியில் போட்டிக்கு ஓடிய நிலையில் இ.போ.ச பேருந்தை, தனியார் பேருந்து முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரு தரப்புக்குமிடையில் முறுகல் நிலை உண்டானதை தொடர்ந்து இருவரும் பேருந்துகளை நடுவீதியில் நிறுத்தி விட்டு சண்டையிட்டுக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்துகளை விட்டு கீழே இறங்கி வேறு பேருந்துகளில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பொலிஸார் இரு சாரதிகளினதும் சாரதி அனுமதி பத்திரங்களை எடுத்துக் கொண்டுள்ளதுடன், பேருந்துகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.