மொழிப் பிரச்சினையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மக்கள் முறைப்பாடு

303

மொழிப் பிரச்சினையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வடக்கின் அரசாங்க வைத்தியசாலைகளில் தமிழ் பேசும் மருத்துவர்கள் இன்மை மற்றும் காவல் நிலையங்களில் தமி;ழ் மொழி அறிந்த உத்தியோகத்தர்கள் இன்மையினால் இவ்வாறு கடுமையான நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு செய்யச் செல்லும் போது பணம் கொடுத்து இரண்டு மொழிகளையும் தெரிந்த ஒருவரை அழைத்துச் செல்ல நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்பவர்கள் சரியான விடயங்களைச் சொல்கின்றார்களா என்பது கூட தெரியவில்லை என  குறிப்பிட்டுள்ளனர்.
பிரதேச வைத்தியசாலையில் தமிழ் மொழி பேசக்கூடிய மருத்துவர்கள் இன்மையினால் தம்மைப் போலவே மருத்துவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தமி;ழ் மற்றும் சிங்கள மொழிகள் இலங்கையில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துள்ளன. இதேவேளை, தமிழ் மொழி பேசக்கூடிய உத்தியொகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் உத்தியோகத்தர்களுக்கு மொழிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE