சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்தப்படும் – பிரதமர்

342

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடாத்துதல் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் குறைந்தபட்சம் 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் முறைமை ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து விடயங்கள் குறித்தும் பேசப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE