பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களுக்கு அரசாங்கம் இணக்கம்!

320
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரத்து செய்யப்பட்ட வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோரினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ரத்து செய்யப்பட்ட அனுமதி பத்திரத்திற்கு பதிலாக, அரசாங்கத்தினால் வேண்டியதொரு வாகனத்தை கொண்டு வருவதற்கும், அதற்காக அரசாங்கத்தினாலேயே, அரச வங்கியூடாக கடனை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE