ஆளும் கட்சியின் ஆறு கட்சிகள் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.

391

 

ஆளும் கட்சியின் ஆறு கட்சிகள் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து புதிய அரசிலய் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் இந்த கூட்டணி பெயரிடப்படவுள்ளது.

இந்த கூட்டணியை பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.

இந்த புதிய கூட்டணிக்காக ஏற்கனவே புதிய யாப்பு ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்பட்டுள்ள யாப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட உள்ளது.

விரைவில் இந்த புதிய அரசியல் கூட்டணி பதிவு செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய,  ஜனநாயக மக்கள் முன்னணி, அமைச்சர் ரிசாட் பதியூதீன் தரப்பு, அமைச்சர் ராஜிதவின் தரப்பு, ஹிருனிகா பிரேமசந்திரவின் தரப்பு ஆகியன கூட்டாக இணைந்து இந்த புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.

SHARE