5 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்த 55 வயது குடும்பஸ்தர் கைது

334
வவுனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயது குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வேலன்குளம், மடுக்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த 5 வயது சிறுமியே துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதவேளை குறித்த வீட்டிற்குச் சென்ற அப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து துஸ்பிரயோகம் செய்ததாக தெரியவருகிறது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபரான 55 வயது குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE