நாடாளுமன்றத்தில் தமது சம்மேளனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்கு எதிராக கையொப்பங்களை திரட்டப் போவதாக அரச மருத்துவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முடிவு நேற்று மாலை சம்மேளனத்தின் மத்தியக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது அரச மருத்துவர் சம்மேளனம், மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டது என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுடனான உடன்பாட்டுக்கு அரச மருத்துவர் சம்மேளனம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.