களைகட்டிய திருமண விழா: காதலியை கரம்பிடித்தார் ரோஹித் சர்மா

327
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தனது காதலி ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார்.இவர்களது திருமணம் நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்களது திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணத்திற்கு சச்சின் தனது மனைவி அஞ்சலியுடனும், டோனி தனது மனைவி சாஷ்சியுடனும் வந்திருந்தனர். அதே போல், யுவராஜ் சிங் தனது காதலி ஹசல் கீச்சுடன் வந்திருந்தார்.

சமீபத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை திருமணம் செய்தார். தற்போது புதுமாப்பிள்ளை வரிசையில் ரோஹித்தும் இணைந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நிட்டா மற்றும் முகேஷ் அம்பானி மும்பை அணியின் வீரர்கள் மற்றும் புதுமாப்பிள்ளைகளான ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங்கிற்கு அவர்களது இல்லத்தில் விருந்தளித்தனர்.

SHARE