நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இரண்டு பெண்களின் சடலங்கள்

402

 

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெரியவருவதாவது- ஆர்.எஜ்.ஷகீலா நிமாலி (வயது 33), டி.நிர்மலா மானெல் (வயது 33) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

body 77e

இவர்கள் இருவரும் சிறிய கிலேத்தேவ, முகுனு வட்டவல, அலாவத்தை, புத்தளம் முகவரியைக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர் வரும் வழியில் ரம்பொடை ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர். குறித்த குழுவினரில் அநேகமானவர்கள் நீராடிய பின்பு வெளியேறியுள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் நீண்ட நேரமாக நீராடிக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது திடீரென நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் நீரிற்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் வருகை தந்த அனைவரும் இவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி செய்துள்ள போதும் நீரின் வேகம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக இவர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையிலேயே இவர்கள் இன்று காலை கொத்மலை பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கபட்டு பின் மரண பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லபட்டுள்ளது.

SHARE