விசுவமடு மகாவித்தியாலயத்தில் விசுவநாதம் எனும் நூல் வெளியீட்டு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் அன்ரன் குலதாஸ் தலைமையில் இடம் பெற்றது முன்னதாக விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர் இந்நிகழ்வின் சிறப்புரையினை பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் நிகழ்தினார் அவர் தனது உரையில் சமூதாயத்தின் மனித வளங்களை உருவாக்குவது ஒவ்வொரு பாடசாலையின் கடமை.
இந்த இடத்தில் உயர்ந்து நிற்பவர்கள் ஆசிரியர்கள் இந்த ஆசிரியர்கள் தான் சமூதாயத்தின் மனித வளங்களை உருவாக்குபவர்கள் ஒரு நாட்டின் முக்கியமான வளம் எது என்று கூறினால் அது மனித வளம் என்று தான் சொல்லலாம். இந்த மனித வளங்களை வைத்துக்கொண்டுதான் எத்தனையோ நாடுகள் வளர்ந்து நிக்கின்றன நாம் ஒரு கொடிய யுத்தத்தின் மூலம் அடித்து உடைக்கப்பட்டு இந்த மண்ணில் விடப்பட்டவர்கள். நாம் நினைக்கின்றோம் அழிக்கப்பட்ட வளங்களை மீண்டும் எழுந்து வளர்த்துவர முடியாது என்று அப்படியல்ல?
உலக மகாயுத்தத்தில் அழிக்கப்பட்ட யப்பான் நாடு கூட தொழில் நுட்பத்துடன் கூடிய கல்வி அறிவை பெற்று இன்று தொழில்நுட்பத்திலும் வளர்ந்த நாடாக மாறியுள்ளது, எமது மண்ணில் எமது வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. நாம் யாரிடமும் கையேந்திய இனம் அல்ல கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம் ஆனாலும் எவரிடமும் கையேந்தாது எமது மனித வளத்தை பயன்படுத்தி முன்னேறவேண்டும். எமது மாணவர்களுக்கு ஏற்ற பயிற்சியினை, வளங்களை அவர்களின் திசையில் நகர்த்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமை எமது நிலத்தில் எமது வளத்தில் எமது பலத்தில் முன்னேற அனைவரும் எமது மனித வளத்தை பயன்படுத்துவோம் என தெரிவித்தார்.