பிஸ்கட் தொண்டையில் சிக்கி குழந்தை மரணம்

298

பிஸ்கட் தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் 05 மாதங்களேயான உதயபாலன் காசினி என்ற பெண் குழந்தை, நேற்று திங்கட்கிழமை (14) மரணமடைந்த சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (13) இரவு குழந்தைக்கு பாலில் பிஸ்கட்டையும் சேர்த்துக் கொடுத்து குழந்தையை உறங்க வைத்துள்ளனர். திங்கட்கிழமை (14) அதிகாலை எழுந்து குழந்தையை தூக்கிய போது, குழந்தை அசைவின்றிக் கிடந்துள்ளது.

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை தாய் எடுத்துச் சென்றபோதும், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் பிஸ்கட் தொண்டையில் சிக்கியமையினால் குழந்தை மரணித்தது எனக் கூறப்பட்டது. விசாரணைகளை மேற்கொண்ட, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்

SHARE