ஐ.நா உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன – இலங்கை

312

ஐக்கிய நாடுகள் அமைப்புடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரொஹான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்புடனான உறவுகளை காத்திரமாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளுனடான உறவுகளைப் போன்றே கடந்த காலங்களிலும் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டதனை மறுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி அல்பானியா, அஸ்ட்ரியா, பல்கேரியா, கம்போடியா, பின்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஜோர்தான், லாவோஸ், லிபியா, நேபாளம்  உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை ஐக்கிய நடுகள் அமைப்பில் இணைந்து கொண்டிருந்தது.

SHARE