இலங்கை உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் நாட்டை கட்டியெழுப்பதல் போன்றவற்றில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகார செயலாளர் தோமஸ் செனன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கையுடன் இணைந்து அபிவிருத்திக்காக பங்களிப்பு வழங்கக் கிட்டியமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கத்தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.