வெலிமடை பொலிஸ் பிரிவில் 1 கிராம் 39 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை வெளிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்..
வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், இவரிடமிருந்து 39 பக்கற்றுகள் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை இன்று வெளிமடை நிதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுள்ளவத்த என்ற இடத்தில் 1 கிராம் 500மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை வடகொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
வடகொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெள்ளம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபரை கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், இவர் இன்று மாளிகாக்கந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.