டெஸ்ட் போட்டியில் மீண்டும் அதிரடி காட்ட வருகிறார் கிறிஸ் கெய்ல்

320

டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியை காப்பாற்ற மீண்டும் அணிக்கு திருப்ப உள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதனால் சொந்த நாட்டுக்கு விளையாடாமல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டும் செயல்படுவதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் அணியை காப்பாற்றுவதற்காக மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்ப உள்ளதாக கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

மேலும், தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், அடுத்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-2 என இழந்தது.

அத்துடன் சமீபத்தில் முடிந்த அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது குறிப்பிட்டத்தக்கது.

SHARE