சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் பீட்டர்சனை அனுமதிக்க மறுத்த விமான நிறுவனம்!

319

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் குவாண்டஸ் விமான நிறுவன ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பீட்டர்சன் சர்வதேச அணியில் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

இதனால் அவர் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ராம் ஸ்லாம் டி20 லீக் போட்டியில் பீட்டர்சன் பங்கேற்று விளையாடினார். இந்த தொடர் சில தினங்களுக்கு முன்பு முடிந்ததது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்காவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குவாண்டஸ் விமானத்தில் சென்றார்.

முன்னதாக சாதாரணமான செருப்பு அணிந்திருந்ததாக விமான ஊழியர்கள் பீட்டர்சனை விமான நிலைய ஓய்வறைக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த பீட்டர்சன், குவாண்டஸ் விமான நிறுவனத்தை டுவிட்டரில் தலையாட்டி பொம்மை என கடுமையாக சாடியுள்ளார்.

SHARE