ஐபிஎல் தொடரில் டோனியின் சவால்களை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டத்தில் இருந்து டோனியும், ரெய்னாவும் 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வந்தனர்.
இந்நிலையில் புதிய ஐபிஎல் அணிகளான புனேவுக்கு டோனியும், ராஜ்கோட்டுக்கு ரெய்னாவும் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் டோனியை முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறார் ரெய்னா.
இது பற்றி அவர் கூறுகையில், “ராஜ்கோட்டில் நான் ஜூனியர்அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.
இங்குள்ள சூழல் எனக்கு நன்கு பழக்கப்பட்டதால் அதை சாதமாக பயன்படுத்திகொள்வேன்.
டோனிக்கு எதிராக விளையாட்டு வீரருக்குரிய முழு உத்வேகத்துடன் விளையாடுவோம்” என்று கூறியுள்ளார்.
ராஜ்கோட் அணியில் தெரிவானது பற்றி பேசிய ரெய்னா, “ராஜ்கோட் அழகிய, துடிப்பான நகரம். அந்த அணிக்காக விளையாடவிருப்பது உற்சாகம் அளிக்கிறது.
புதிய அணி வீரர்களையும், குஜராத் மக்களின் ஆதரவையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.