கிராம ராஜ்ஜிய முறைமைக்கு வட மாகாண முலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை வழங்கும் ஒர் திட்டமாக அரசாங்கம் கிராம ராஜ்ஜிய முறைமையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்த முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிராம இராச்சிய திட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைகளின் அதிகாரங்கள் வலுவிழக்கக்கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 13ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களையும் பறிக்கும் வகையிலேயே இந்த புதிய நடைமுறை அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரங்களும் முழுக்க முழுக்க முத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தும் முறைமையே அமுலில் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2016ம் ஆண்டுக்கான திட்டங்களுக்காக கொரிய நிதியில் 40 வீதமான நிதிiயே அரசாங்கம் வழங்கியுள்ளதாகத் n;தரிவித்துள்ளார்.