டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான விசாரணைகள் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று தசாப்த காலங்களாக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1986ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படுகின்றது.
தேவானந்தாவை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படாமலேயே வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சென்னை சூளைமேட்டில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தேவனந்தா உள்ளிட்ட ஒன்பது தமிழர்கள் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கருதப்பட்டு கைதுசெய்ப்பட்டிருந்தனர்.
பின்னர் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போது அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவானந்தாவை கைது செய்ய இந்திய நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், ராஜதந்திர நிலையைப் பயன்படுத்தி தேவானந்தா இந்தியாவிற்கு விஜயங்களை செய்திருந்த போது அதிகாரிகள் அவரை கைது செய்யவில்லை.
எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி டக்ளஸ் தேவானந்தா வீடியோ கான்பிரன்ஸ் முறையில் விசாரணைகளில் பங்கேற்க உள்ளார்.